| தேவையான பொருட்கள் 
 சுண்டைக்காய் வற்றல்	-	1 கிண்ணம்
 மிளகாய் வற்றல்	-	4
 உளுத்தம் பருப்பு	-	2 ஸ்பூன்
 பெருங்காயம்	-	சிறிது
 உப்பு		-	தேவையான அளவு
 புளி		-	நெல்லிக்காய் அளவு
 எண்ணெய்		-	4 ஸ்பூன்
 
 செய்முறை
 
 வாணலியில் எண்ணெய்விட்டு சுண்டைக்காய் வற்றலை கருஞ்சிவப்பாக வறுக்கவும்.
 
 பெருங்காயத்தை பொரிக்கவும்.
 
 உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை பொன்னிறத்தில் வறுக்கவும்.
 
 இவற்றை மிக்ஸியில் பொடி செய்யவும்.
 
 பிறகு உப்பு, புளியுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
 
 இந்திரா காசிநாதன்
 |