| தேவையான பொருட்கள் 
 சுண்டைக்காய் வற்றல்	- ஒரு பிடி
 புளி		-	சிறு எலுமிச்சை அளவு
 உப்பு		-	தேவையான அளவு
 உளுத்தம் பருப்பு	-	2 ஸ்பூன்
 துவரம் பருப்பு	-	2 ஸ்பூன்
 கடலைப் பருப்பு	-	1 ஸ்பூன்
 மிளகு		-	2 ஸ்பூன்
 மிளகாய் வற்றல்	-	4
 பெருங்காயம்	-	சிறு கட்டி
 கடுகு		-	1 ஸ்பூன்
 எண்ணெய்		-	1/2 கரண்டி
 கருவேப்பிலை	-	1 பிடி வெல்லப்பொடி - 1 ஸ்பூன்
 
 செய்முறை
 
 வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு வகைகள், மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையுடன்  மிக்ஸியில் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை பொரிக் கவும். பெருங்காயம், கடுகு இவற்றையும் போட்டு புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு போடவும். புளிவாசனை போகுமளவு (சுமார் 5 நிமிடங்கள்) கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த பொடியுடன் வெல்லப் பொடியையும் போட்டு சரியான பதத்துக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கலந்து சிறிது கொதித்ததும் கீழே இறக்கவும்.
 
 மேலும் சுவை சேர்க்க வெண்ணெய் 1 ஸ்பூன் போடலாம்.
 
 இந்திரா காசிநாதன்
 |