| தேவையான பொருள்கள் 
 பிரட் தூள்				-	1 கிண்ணம்
 ரவை				-	1/3 கிண்ணம்
 தயிர் (கெட்டியானது)			-	1 கிண்ணம்
 உடைத்த முந்திரி			-	1 டேபிள் ஸ்பூன்
 கடுகு				-	1 டேபிள் ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு			-	1 டேபிள் ஸ்பூன்
 பச்சை மிளகாய்			-	1 டேபிள் ஸ்பூன் (துண்டு துண்டாக நறுக்கியது)
 இஞ்சி				-	1/2 டேபிள் ஸ்பூன் (துண்டு துண்டாக நறுக்கியது)
 கொத்தமல்லி, கறிவேப்பிலை		-	ஒரு கைப்பிடி அளவு
 வேகவைத்த காய்கறிகள் காரட், பீன்ஸ் 	-	1/4 கிண்ணம்
 உப்பு				-	தேவையான அளவு
 
 செய்முறை
 
 பிரட் தூள், ரவை, தயிர், முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றுடன் வேகவைத்த காய்கறிகள் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
 
 கடாயில் எண்ணெயை வேகவைத்து அதில் கடுகு, ஊளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு பென்னிறமாக வறுக்கவும்.
 
 பருப்பு பொன்னிறமாக வரும் போது அதில் முதலில் செய்து வைத்துள்ள பிரட் மற்றும் காய்கறியை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.
 
 பிறகு இட்லி தட்டில் இட்லி மாவு போல் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
 
 இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது மிளகாய் பொடி ஏதாவது செய்து கொள்ளலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |