சென்னா தால் புலாவ்
  தேவையான பொருட்கள்
  பாஸ்மதி அரிசி	-	2 கப் சென்னா தால்	-	1 1/2 கப் வெங்காயம்		-	1 மிளகாய் பொடி	-	1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்	-	1 தேக்கரண்டி கிராம்பு		-	3 ஏலக்காய்		-	2 இலவங்கப்பட்டை	-	சிறிது பிரிஞ்சி இலை	-	சிறிது நெய்		-	1/2 கப் பால்		-	1/2 கப் இஞ்சி விழுது	-	சிறிது உப்பு		-	தேவைக்கேற்ப முந்திரி பருப்பு	-	6 கொத்துமல்லி	-	நறுக்கியது கொஞ்சம்
  செய்முறை
  அரிசியையும், சென்னா தாலையும் 15 நிமிடம் ஊறவிடவும். பின்பு வடித்து வாணலியில் நெய்விட்டு லேசாக வறுத்து, அதில் உப்பு போட்டு வேகவிடவும். பிறகு வடிய வைக்கவும். வாணலியில் நெய்விட்டு வெங்காயம், கிராம்பு, ஏலக்காய், பட்டை பிரிஞ்சி இலை இவற்றைப் பொன்னிறமாக வறுத்து இஞ்சி விழுதும் போட்டுத் தண்ணீர் சிறிது விட்டு ஒரு கொதி வரும் வரை விடவும். ஒரு கொதி வந்ததும் வடிய வைத்துள்ள அரிசி சென்னா தாலை நெய்விட்டு சிறிது பிரட்டிப் பால் சேர்த்து மிளகாய்பொடி, மிளகுத்தூள் இவற்றை போட்டு மசாலக் களுடன் கொட்டி மூடி பத்து நிமிடம் வேகவிடவும்.
  தண்ணீர் வற்றியதும் எடுத்து வைக்கவும். முந்திரி வறுத்துப் போட்டு கொத்துமல்லி தழையை நறுக்கி அலங்கரிக்கவும்.
  தங்கம் ராமசாமி |