| புது வருடத்தில் எல்லோரும் 'சீஸ்' என்று சிரித்துக்கொண்டே இருக்க ஒரு எளிமையான சீஸ் கேக் செய்முறையைத் தருகிறேன். 
 தேவையான பொருட்கள்
 
 இஞ்சி பிஸ்கெட்ஸ்		-	10
 (உங்களுக்குப் பிடித்த எந்த ஸ்வீட் பிஸ்கெட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)
 வால்நட்			-	1/2 கிண்ணம்
 உருக்கிய நெய்		-	1 ஸ்பூன்
 பிலடெல்·பியா க்ரீம் சீஸ்	-	1 பேக்
 (அல்லது எந்த க்ரீம் சீஸ்சும்)
 ·ப்ரூட் யோகர்ட்		-	1 கிண்ணம் (லோ fat யோகர்ட்)
 முட்டை			-	2
 சர்க்கரை			-	1/2 கிண்ணம்
 
 செய்முறை
 
 Ovenஐ 350 டிகிரிக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
 
 பிஸ்கெட்டையும் வால்நட்டையும் ரவை பதத்திற்குப் பொடி செய்து நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.
 
 ஒரு பேக்கிங் பேனில் இந்தக் கலவையைப் போட்டு spread செய்யவும். உள்ளங்கையால் இதனை லேசாக அழுத்தவும். சர்க்கரையை க்ரீம் மற்றும் சீஸோடு பொடி செய்யவும்.
 
 முட்டையை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 
 கடைசியாக யோகர்ட்டைச் சேர்த்து, பேக்கிங் பேனை ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதன் மேல் வைத்து 45 நிமிடங்கள் Ovenல் 350 degreeல் வைக்கவும். பின்னர் 30 நிமிடங்கள் Ovenல் கேக்கை வைத்திருக்கவும்
 
 கேக்கை எடுத்து பிளாஸ்டிக் wrap செய்து குறைந்தது 12 மணி நேரமாவது குளிர்பதனப் படுத்தவும்.
 
 போகி, பொங்கல், கனு ஆகிய பண்டிகைகளுக்குச் செய்யும் வழக்கமான உணவு வகைகளுடன் சில புதுமையான போளி வகைகளுடன் பொங்கல் வகைகளையும் நீங்கள் படித்து, சமைத்து, ருசிக்க தருகிறோம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |