| தாத்தாப் பாட்டு 
 நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?
 
 மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் எப்படி இருக்கார்னு கேட்டாரு!
 
 ******
 
 அதிகார வரம்பு
 
 புதுக்கணவன்: அது என்ன கண்ணே, நமக்குள்ளே ஏதோ ஒப்பந்தம்னு சொன்னியே?
 
 புதுமனைவி: நம்ம வீட்டுக்குள்ளே என்னை நீங்க அதிகாரம் பண்ணலாம். ஆனால் வெளியே நான்தான் உங்களை அதிகாரம் பண்ணுவேன். சரியா?
 
 ******
 
 பக்க வாதம்
 
 நண்பர்: உங்க மனைவிக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தால் நீங்க எந்த பக்கம் இருப்பீங்க?
 
 கணவர்: கொல்லைப்பக்கம்.
 
 பரிமேலழகர்
 |