| இது தேங்காய்க் கொப்பரையைப் பயன்படுத்திச் செய்யும் பெங்களூர் ஸ்பெஷல். 
 தேவையான பொருட்கள்
 
 கொப்பரைப் பொடி	-	2 கிண்ணம்
 சர்க்கரைப் பொடி	-	1 கிண்ணம்
 ஏலக்காய்ப் பொடி	-	1/4 தேக்கரண்டி
 பாதாம் மிக்ஸ்	-	1 தேக்கரண்டி
 மைதாமாவு	 -	250 கிராம்
 கேசரித் தூள்	-	1 சிட்டிகை
 
 செய்முறை
 
 சர்க்கரை பொடி, கொப்பரைப் பொடி, ஏலக்காய்ப் பொடி, சிறிது பாதாம் மிக்ஸ் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். மைதாமாவில் நெய்விட்டுப் பிசிறி, கேசரி பவுடர், தண்ணீர் சேர்த்துப் பிசையவும். எலுமிச்சையளவு மாவை எடுத்து அப்பளமாக இட்டு, மத்தியில் 3 தேக்கரண்டி கலந்து வைத்த கொப்பரைப் பொடியை வைத்து மூடி அப்பளமாக இடவும்.
 
 மிகவும் அழுத்தாமல் கவனமாக இடவும். பொடி வெளியில் வந்தால் சுடும்பொழுது தீய்ந்து போய்க் கசந்துவிடும். பின் தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் நெய் கலந்த எண்ணெய்விட்டு நிதானமாகக் குறைந்த தீயில் சுடவும். 10 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்கும்.
 
 சி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
 |