| தேவையான பொருட்கள் 
 கடலை மாவு	- 1 கிண்ணம்
 பொடித்த சர்க்கரை	- 1 கிண்ணம்
 நெய்		- 1/2 கிண்ணம்
 முந்திரிப்பருப்பு	- 1 மேசைக்கரண்டி
 திராட்சை		- 1 மேசைக்கரண்டி
 ஏலக்காய்ப் பொடி	- சிறிதளவு
 
 செய்முறை
 
 அடி கனமான வாணலியில் நெய்யை விட்டுச் சற்று காய்ந்ததும் மாவைப்போட்டு நன்றாக வறுக்கவும். தீயை மிதமாக வைக்கவும். கடலைமாவு நன்றாக வறுபட்டு பொன் போல் ஆனதும் நல்ல வறுபட்ட வாசனையும் வரும்.
 
 உடன் அடுப்பில் இருந்து இறக்கிப் பொடித்த சர்க்கரை, வறுத்த திராட்சை மற்றும் முந்திரி, ஏலப்பொடி சேர்த்து சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |