| வெய்யிலுக்குக் குளிர்ச்சியாகப் பருக இதோ ஒரு கதிரொளிச் சாறு! 
 கதிரொளிச் சாறு (Sunshine Juice)
 
 தேவையான பொருட்கள்
 
 வாழைப்பழம்	-	1
 காரட் 	-	1
 வெள்ளரிக்காய் 	-	1
 எலுமிச்சம் பழம் 	-	1/2 மூடி
 பச்சை நிற ஆப்பிள்	-	1/2 கிண்ணம் (துண்டுகள்)
 விதை நீக்கிய ஆரஞ்சுச் சுளை	-	1/2 கிண்ணம்
 சர்க்கரை 	-	1 மேசைக்கரண்டி
 மிளகுப்பொடி 	-	1/4 தேக்கரண்டி
 கொத்துமல்லித் தழை-	1 மேசைக்கரண்டி
 
 செய்முறை
 
 மிளகு, கொத்துமல்லியைத் தவிர மேற்கூறியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து, கரகரப்பான ஐஸ்துகள்களைப் போட்டு மிளகுப்பொடி கொத்துமல்லி சேர்த்துக் குடித்தால் இரத்தக் கொதிப்பு வராது. மேனியில் பளபளப்பு மிகும்.
 
 'காமிதி'
 |