| இது ஜலதோஷம், ஜுரம் ஆகிய நேரங்களிலும், ஜீரணக்குறைவாக இருக்கும்போதும் மிகவும் நல்லது. 
 தேவையான பொருட்கள்
 
 வெந்த சாதம்	-	2 கிண்ணம்
 மிளகு 	-	10
 சீரகம் 	-	1 மேசைக்கரண்டி
 கறிவேப்பிலை 	-	10
 நெய் 	-	1 மேசைக்கரண்டி
 உப்பு 	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 
 மிளகு,சீரகத்தை மிக்ஸியில் போட்டுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய்விட்டு, சூடுபடுத்தி அரைத்த மிளகுசீரகப் பொடியைப் போட்டுப் பொரித்து, பின்னர் கறிவேப் பிலையைப் போட்டு பொரித்து சாதத்தில் போட்டு, நெய் விட்டு, உப்பு போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |