துடைப்பம்
ஒரு முதியவர் மரணப்படுக்கையில் கிடந்தார். அவர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். கடைசித் தருணங்களில் அவரால் சில வார்த்தைகளை மட்டுமே உளற முடிந்தது. அவர் சொன்னதை அவரது பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியவில்லை; அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்து வந்தனர். ஆக்ஸிஜன் அல்லது ஏதாவது கொடுத்து, கிழவரின் வார்த்தைகள் தெளிவாக இருக்கும்படிச் செய்யக் கேட்டனர்.

கிழவர் தான் சம்பாதித்த பணத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்பதைத் தங்களிடம் சொல்ல முயல்வதாக அவர்கள் ஊகித்தனர். எனவே, பேசுவதைச் சரிவரக் கேட்க எல்லா முயற்சிகளையும் செய்தனர். ஆனால் அவர்களுக்கு 'க' என்ற ஒலி மட்டுமே தெளிவாகக் கேட்டது. எனவே, கனகம் (தங்கம்), கரு (கன்றுக்குட்டி), கனஜா (நெற்குதிர்), கசபர்க்கே (துடைப்பம்) என்றெல்லாம் நினைத்தார்கள்.

ஒரு துடைப்பத்தைக் காட்டியபோது, தலையை ஆட்டிவிட்டுக் கிழவர் உயிரை விட்டார். அதனால் அவர் பின்னர் துடைப்பமாகப் பிறக்க வேண்டியதாயிற்று. ஏனெனில், அதுதான் அவரது கடைசி எண்ணம்!

நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2026

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com