மதுமிதா: தமிழை நேசிக்கக் கற்றுக்கொள்
கலிஃபோர்னியாவின் பிளசன்டன் நகரில் வசிக்கும் மதுமிதா தமிழை நேசிக்கக் கற்றுக்கொள் என்ற கருத்தியலில் திட்டப்பணி செயது பெண் சாரணர் தங்க விருது (Girl scout Gold award) வென்றுள்ளார்.

சிறு வயதிலிருந்தே வீட்டில் தாய்மொழி தமிழில் பேசி வளர்ந்த மதுமிதா தமிழ்ப் பள்ளியில் ஏழு ஆண்டுகள் படித்து, பிறகு அதே பள்ளியில் உதவி ஆசிரியையாக இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார் .

நூலகத்துக்குத் தமிழ் நூல் கொடை



தமிழ் ஆர்வத்தினால் அலமேடா கவுன்ட்டி நூலகங்களில் சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களைக் கொடுத்துள்ளார். மேலும் லிவர்மோர் பள்ளிக்கு ஃப்ளாஷ் கார்டுகள், புதிர்கள் போன்ற சாதனங்களை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

மதுமிதா இந்த ஆண்டு பள்ளி உயர்கல்வியை முடித்து, வரும் ஆகஸ்ட் மாதம் சான் ஹேஸே ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க உள்ளார்.

தமிழ் கற்பிக்க உதவும் கருவிகள்



“தமிழ் மொழி என்னை என் வேர்களுடன் இணைக்க உதவுகிறது. அடுத்த தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்வதில் ஒரு சிறு பங்கு வகிக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார் மதுமிதா.

அலமேடா கவுன்டி நூலகங்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்கள்



தகவல்: பிரபா பாலசுப்ரமணியம்,
பிளசன்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com