அறிந்தோர் சொல்வதைக் கேளுங்கள்
சிலர் ஓர் ஆற்றின் கரைக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால் எப்படி ஆற்றைக் கடப்பது என்று விசாரித்தனர். காலற்ற ஒருவர், "இந்த இடத்தில் கடப்பது ஆபத்தானது, இன்னும் கொஞ்ச தூரம் ஆறு போகும் திசையில் செல்லுங்கள்" என்றார். அவர்கள் அவரை நம்பவில்லை, ஏனென்றால் அவர் தானே நடந்து சென்றிருக்க முடியாது!

பார்வையற்ற ஒருவர், "நீங்கள் கடக்க முடியும்; சிறிது இடதுபுறம் சென்று பின்னர் வலப்புறமாகச் செல்லுங்கள்" என்றார். அவர்கள் அவரது ஆலோசனையையும் கேட்கவில்லை, ஏனென்றால் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் வேறு யாராலோ வழிநடத்தப் பட்டிருக்க வேண்டும்.

கடைசியாக ஒருவர் வந்தார். அவர் அவர்களை மறுகரைக்குக் கூட்டிச் செல்ல முன்வந்தார். "நான் அடிக்கடி கடந்து சென்றிருக்கிறேன். நான் மறுகரையில் வசிக்கிறேன். இந்தக் கரையில் எனக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன" என்றார் அவர். அவர்கள் நம்பிக்கையுடன் அவரைப் பின்தொடர்ந்தனர், அவர்களால் பாதுகாப்பாக மறுகரையை அடைய முடியும்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com