டிசம்பர் மாதத் 'தென்றல்' இதழில் 'பாரதியாரும் போலீசாரும்' என்று, புதுமைப்பித்தன் எழுதியிருந்த குறிப்புகள் மிகமிக அருமை. பா.சு. ரமணன் எழுதிவரும் ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் அவர்களின் ஆன்மீகப் பயண விவரங்களும் மிக அற்புதம்.
டிசம்பர் மாதச் சிறப்பாக 'கிழக்கு தேடிய ஒளி' மற்றும் 'முத்ரா சார்' சிறுகதைகள் மனதை உருக்கின. டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றிய எழுத்தாளர் கஜமுகன் அவர்கள் .எழுத்தைத் தவிர சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டு பணிகள் செய்து, ஒய்வுபெற்ற பிறகும் 86 வயதுவரை செய்திப்பிரிவில் பணியாற்றினார் என்பது அவரது திறமைக்கும், மேதமைக்கும் சான்று.
தென்றலின் அத்தனை பகுதிகளும், மிகவும் சுவாரசியமாக உள்ளன.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |