அக்டோபர் 5, 2025 அன்று சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேட்டர் தனது 50வது ஆண்டு விழாவை ரூக்கெரி பில்டிங்கில் (209 South La Salle street, Chicago, IL 60604) நடத்தவுள்ளது.
கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர், முன்னாள் மாணவர் மற்றும் ரசிகர்கள் இணைந்து இந்த 50வது ஆண்டு நிறைவை 'ரச சூத்ரா' என்ற விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்தியக் கலையான பரத நாட்டியத்தைச் சிகாகோ பகுதிக்கு கொண்டு வந்த இதன் நிறுவனர் இயக்குநர் திருமதி ஹேமா ராஜகோபாலன் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை இந்த விழா கொண்டாடுகிறது. இந்த நிதி திரட்டும் 50-வது ஆண்டில் 50 நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பாரம்பரியத்தை நிலைநிறுத்த, மரபைப் புரிந்துகொள்ள, கலைகளை ஆதரிக்க நாட்யா டான்ஸ் தியேட்டர் விழாவை ஆதரிக்க அனைவரும் அழைக்கப் படுகிறார்கள்.
நுழைவுச் சீட்டுகள் வாங்க: tinyurl.com/Rasasutra |