ஸ்ரீ சத்ய சாயி பாபா: நியூயார்க் நகரத்தின் பிரகடனம்
நியூயார்க் சிட்டி ஹாலில் ஏப்ரல் 22, 2025 அன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் மனித குலத்திற்கான தன்னலமற்ற சேவையினைப் போற்றும் வகையில், ஏப்ரல் 24, 2025 (வியாழக்கிழமை) பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழா தினமாகக் கொண்டாடப்படும் என்று நியூயார்க் நகர மேயர் ஸ்ரீ எரிக் ஆடம்ஸ் அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்தார்.
மேயர் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சாயி குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் முன்னிலையில், நியூயார்க் நகரத்தின் துணை ஆணையர் ஸ்ரீ திலீப் சௌஹான் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டார்.



© TamilOnline.com