| ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி (நியூ ஜெர்சி) ஏழாவது வருடமாக மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் 9, 2023 அன்று ஸ்ரீ சாயி பாலாஜி கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடியது. கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி இயக்குனர் திருமதி நிர்மலா ராஜேஷ் இனிதாகப் பாடித் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேலான எண்ணிக்கையில் குழந்தைகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்று பாரதியின் பாடல்களை இசைத்தும், அவற்றுக்கு நடனமாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.திருமதி நிர்மலாவும் திரு ராஜேஷும் பாடிய மங்களத்துடன் விழா இனிதே நிறைவெய்தியது. 
 
  
 விழா நிகழ்ச்சிகளின் வீடியோவைக் காண:
 இணையதளம்: www.sruthiswara.com
 யூட்யூப்: @SruthiswaraSchoolofMusic
 முகநூல்: @sruthiswara
 இன்ஸ்டாகிராம்: @sruthiswaraschool
 
 
  
  
 செய்திக்குறிப்பிலிருந்து
 |