| தேவையான பொருட்கள் வெள்ளை உளுந்து	-	1 கிண்ணம்
 சோனாமசூரி அரிசி	-	1/4 கிண்ணம்
 கல்கண்டு (அ) வெல்லம்	-	3/4 கிண்ணம்
 
 செய்முறை
 உளுத்தம்பருப்பு, அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதைச் சல்லடையில் கொட்டி, தண்ணீரை நன்றாக வடிக்கவும். கிரைண்டரில் அதைப் போட்டு அத்துடன் பொடித்த வெல்லம் அல்லது கல்கண்டு சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கவே கூடாது. வடைச்சட்டியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும்.
 
 குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் வடை இது.
 
 குழந்தைகளைக் கவரும் வகையில் பார்ப்பதற்கு டோநட் போல இருக்கும்.
 
 மரகதம் அம்மா,
 அட்லாண்டா, ஜார்ஜியா
 |