| தேவையான பொருட்கள் ஆப்பிள் (சிறியது) - 2
 மைதா   -  1 கிண்ணம்
 சர்க்கரை  - ¾ கிண்ணம்
 எண்ணெய் - ⅓ கிண்ணம்
 பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
 வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
 உப்பு - சிறிதளவு
 பட்டைத் தூள் (cinnamon) - ¼ தேக்கரண்டி
 ஜாதிக்காய்ப் பொடி (Nutmeg) - ⅛ தேக்கரண்டி
 
 செய்முறை
 முதலில் ஆப்பிள்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு கிண்ணம் தண்ணீரில் ஐந்து நிமிடம் நன்றாக வேகவைத்து ஆறவிடவும்.  வெந்த ஆப்பிள் துண்டங்களை நன்றாக மசித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு, பட்டைத்தூள், ஜாதிக்காய்த் தூள், எண்ணெய், வனில்லா எசன்ஸ் மற்றும் மசித்த ஆப்பிள் பழக்கூழைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி (அ) பார்ச்மெண்ட் தாளை வைத்து கலவையை வார்த்து,  350டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருபது முதல் முப்பது நிமிடம் வெதுப்பவும்.
 
 இருபது நிமிடமானதும் ஒரு முள்கரண்டியால் கேக்கைக் குத்திப் பார்க்கவும். கலவை அதில் ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி.  அடுப்பை அணைத்து ட்ரேயை வெளியே எடுத்து ஆறவிடவும். நன்றாக ஆறியபின் துண்டுகளாக்கிச் சாப்பிட்டால் குதூகலம்தான்.
 
 தெய்வானை சோமசுந்தரம்,
 நியூ ஹாம்ப்ஷயர்
 |