| தேவையான பொருட்கள் கோதுமை மாவு  - 2 கிண்ணம்
 ப்ராக்கோலி      - 1 பெரிய பூ
 சீரகத்தூள்       - 2 தேக்கரண்டி
 உப்பு            - தேவைக்கேற்ப
 தண்ணீர்        - தேவைக்கேற்ப
 எண்ணெய்      - 4 மேசைக்கரண்டி
 
 செய்முறை
 முதலில் பிராக்கொலியை சிறிய பூக்களாகப் பிரித்து எடுத்துக் கழுவிக்கொள்ளவும். அதனைச் சாப்பரில் இட்டு நன்றாகத் தூளாக்கிக் கொண்டு, ஒரு மைக்ரோவேவ் அவனில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். உடனே அதை மேற்கூறிய பொருட்களுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒருமணி நேரம் கழித்துச் சப்பாத்திகளாகப் போட்டு எடுக்கவும். சப்பாத்தி பொன்னிறம் ஆனதும் சிறிதளவு எண்ணெய் தடவி எடுக்கலாம். இப்படிச் செய்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.
 
 தெய்வானை,
 நாஷுவா, நியூ ஹாம்ப்ஷயர்
 |