| மீண்டும் வந்துவிட்டது IndiaProperty.com  வழங்கும் கிருஹப்ரவேஷ். அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் வரவிருக்கும் இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் டாப் 20 பில்டர்கள் தமது 80 திட்டங்களுக்கு மேல் உங்கள் பார்வைக்குக் கொண்டுவர இருக்கிறார்கள். பெங்களூரு, மங்களூரு, கொச்சி, வயநாடு, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை, கோயம்பத்தூர், மும்பை, மைசூரு, நவி மும்பை, தானே, பூனே, நாக்பூர், கோவா, அஹமதாபாத், குர்காவுன், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நீங்கள் நிலம் அல்லது வீடுகளை வாங்குகிற வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது. 
 முதல் 20 ஸ்மார்ட் சிடிகளுக்குள் ஒன்றாகச் சென்னை இடம்பிடித்திருப்பதால் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, வாழ்க்கை வசதிகள் என்று பலவகையிலும் அது விரைந்து முன்னேற்றம் காணவுள்ளது. மூன்று பாதைகளில் மோனோரயில் முற்றிலுமாகச் செயல்படவுள்ளதால் அதுவும் நகரத்தின் போக்குவரத்தைச் செழுமைப்படுத்தும். பெருங்குடி, சோளிங்கநல்லூர், சிறுசேரி ஆகியவற்றில் பெருகிவரும் வேலை வாய்ப்புகளும் ரியல் எஸ்டேட் மதிப்பீடுகளை உயர்த்தி வருகின்றன.
 
 இதைப்போலவே கோயம்புத்தூர், திருச்சி, ஆகிய நகரங்களும் சுற்றுப்புறங்களும் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் அங்கும் முதலீடுகளுக்குச் சிறப்பான வாய்ப்புகளை கிருஹப்ரவேஷ் உங்களுக்குக் கொண்டு வருகிறது.
 
 கீழ்க்கண்ட இடங்களில் இரண்டு நாட்களிலும் காலை 10:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரை கிருஹப்ரவேஷ் நடைபெறும்:
 செப். 24 & 25 Coast Bellevue Hotel, Bellevue, Washington
 அக். 1 & 2 Irving Convention Center, Dallas, Texas
 அக். 8 & 9 Santa Clara Convention Center, Santa Clara, California
 
 உங்களுக்கான விழாக்காலச் சிறப்பு விலைகளில் சரியான சொத்துக்களை ஸ்பாட் புக்கிங் செய்ய இதுவொரு அருமையான வாய்ப்பு.
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 |