| அரிசி வடை 
 தேவையான பொருட்கள்
 வடித்த சாதம் (நன்றாக மசித்தது) - 1 கிண்ணம்
 கடலைமாவு - 1/2 கிண்ணம்
 தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
 பச்சைமிளகாய் - 4
 இஞ்சி - சிறிதளவு
 வெங்காயம் - 1/4 கிண்ணம்
 கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
 கொத்துமல்லி - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - பொரிக்க
 நெய் - 2 தேக்கரண்டி
 
 செய்முறை
 மசித்த சாதத்துடன் கடலைமாவு, தேங்காய்த்துருவல், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, சூடான நெய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பிசையவும். எண்ணெய் காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும். இது மிகவும் நன்றாக இருக்கும். காரம் தேவையானால் அதிகம் போட்டுக்கொள்ளலாம்.
 
 தங்கம் ராமசாமி,
 பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
 |