| தேவையான பொருள்கள்: ரவை - 1 கிண்ணம்
 தயிர் - 1/2 கிண்ணம்
 இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1
 கேரட் துருவல் - 1
 தண்ணீர் - 3/4 கிண்ணம்
 உப்பு - தேவைக்கேற்ப
 சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
 எண்ணெய் - தேவையான அளவு
 
 செய்முறை
 ஒரு வாணலியில் ரவையைப் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில், வறுத்த ரவை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், காரட் துருவல், தயிர், தண்ணீர், உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அந்த மாவில் ஊற்றவும். இந்தக் கலவையை 15 நிமிடம் ஊறவைக்கவும். பணியாரப் பாத்திரம் சூடானதும், எண்ணெய் ஊற்றி, பின் மாவை ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும். ஆவிபறக்கும் ரவை பணியாரம் ரெடி.
 
 காயத்ரி ரமணன்,
 செயின்ட் லூயிஸ், மிசௌரி
 |