| 2015 ஜூன் 27, 28 தேதிகளில் யுவசங்கீத லஹரி, வட அமெரிக்காவின் இளம் கர்நாடக இசைக்கலைஞர்களைக் கொண்டு 'த்வனி-2015' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த அமைப்பு 6 வருடங்களுக்கு முன்பு மிருதங்க வித்வான் சுரேஷ் ராமச்சந்திரன்அவர்களால் தொடங்கப்பட்டது. நியூ ஜெர்சியில் வசிக்கும் கர்நாடக இசையாசிரியர்கள் கே.ச. மணி, ராதிகா மணி, ராஜேஸ்வரி சதீஷ், அஷ்வின் போகேந்திரா, ராமலக்ஷ்மி ஆகியோர் இலவசமாக இளங்கலைஞர்களுக்கு மனோதர்மம், ராகம், ஸ்வரம், லயம் போன்றவற்றின் நுணுக்கங்களில் பயிற்சி தருகிறார்கள். வட அமெரிக்காவில் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் திறமையான இளைஞர்கள் பலரை அழைத்து ஆண்டுக்கு இரண்டுமுறை பெரிய கர்நாடக இசைவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். கோடையில் 'த்வனி', இலையுதிர் காலத்தில் 'சிருஷ்டி' என இவை நடத்தப்படுகின்றன. இவைதவிர, 2 மாதத்துக்கு ஒருமுறை சேம்பர் கச்சேரிகளை நடத்துகிறார்கள். 
 'த்வனி' நியூ ஜெர்ஸி குருவாயூரப்பன் ஆலயத்தில் (31, Wooleytown Road, Morganville, NJ 07751) முழுநாள் நிகழ்ச்சிகளாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி நடைபெறும்:
 
 ஜூன் 27
 
 | நேரம் | கச்சேரி | வயலின் | மிருதங்கம் |  | 9:00 - 10:00 | ஷ்ரேயா ஸ்ரீனிவாசன் | சாரதா கிருஷ்ணன் | சஞ்சீவ் ராஜா |  | 10:05 - 11:05 | திரிவேன் கண்ணன் | விக்னேஷ் கோபால் | நவீன் பசவன்ஹலி |  | 11:10 - 12:10 | விஜய் நாராயணன் | சித்தார்த் அஷோக்குமார் | விக்னேஷ் வெங்கட்ராமன். |  | 12:15 - 1:15 | கௌரி ரகுநந்தன் | விக்னேஷ் தியாகராஜன். | ஆத்ரேய் நாதன் |  | 1:15 - 2:00 | உணவு இடைவேளை |  | 2:00 - 3:00 | சித்தார்த் அஷோக்குமார் நேஹா கிருஷ்ணமாச்சாரி - (வயலின்) |  | விக்னேஷ் வெங்கட்ராமன் |  | 3:05 - 4:00 | சஷாங்க் சுப்ரமணியன் (புல்லாங்குழல்) | சித்தார்த் அஷோக்குமார் | நவீன் பசவன்ஹள்ளி |  | 4:10 - 5:10 | ஷ்யாமளா ராமகிருஷ்ணா | நேஹா கிருஷ்ணமாச்சாரி | கீர்த்தி வெங்கட்ரமணி |  | 5:15 - 6:45 | அநிருத் வெங்கடேஷ் | விக்னேஷ் தியாகராஜன் | அபி சீதாராமன் | 
 
 ஜூன் 28
 
 | நேரம் | கச்சேரி | வயலின் | மிருதங்கம் |  | 9:00 - 10:00 | ஷ்யாம் தியாகராஜன் | விக்னேஷ் கோபால் | சஞ்சீவ் ராஜா |  | 10:05 - 11:05 | ஆனந்தபத்மனபா ராவ் | சாரதா கிருஷ்ணன் | ஆத்ரேய் நாதன் |  | 11:10 - 12:10 | அஷ்வின் ரவி | கமலாகிரண் விஞ்சாமுரி | அபி சீதாராமன் |  | 12:15 - 1:15 | ஐஸ்வர்யா சந்திரசேகர் | விக்னேஷ் தியாகராஜன் | நவீன் பசவன்ஹள்ளி |  | 1:15 - 2:00 | உணவு இடைவேளை |  | 2:00 - 3:00 | பார்கவி கணேஷ் | நேஹா கிருஷ்ணமாச்சாரி | கீர்த்தி வெங்கட்ரமணி |  | 3:05 - 4:05 | கமலாகிரண் விஞ்சமூரி (வயலின்) | - | ஆத்ரேய் நாதன் |  | 4:10 - 5:40 | குஹன் வெங்கட்ராமன் (வீணை) | - | விக்னேஷ் வெங்கட்ராமன் | 
 
 மேலும் விவரங்களுக்கு
 மின்னஞ்சல்: ysldhvani@gmail.com
 வலையகம்: www.yuvasangeethalahari.com
 
 
 
 கணேஷ்,
 நியூ ஜெர்ஸி
 |