நியூ ஜெர்சி: சங்கர நேத்ராலயா கலாச்சார விழா
மார்ச் 14, 2026 அன்று சங்கர நேத்ராலயா (USA) அமைப்பின் நியூ ஜெர்சி பிரிவு கலாச்சார விழா ஒன்றை நடத்தியது. எடிசனில் உள்ள ராயல் ஆல்பர்ட் பேலஸில் இது நடந்தேறியது.

பாரதத்தின் நவீன கண் மருத்துவப் பிதாமகரும் சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான அமரர் பத்மபூஷன் டாக்டர் S.S. பத்ரிநாத் அவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் பாரதத்தின் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கண் பார்வையை கட்டணமில்லா சேவையை 'நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவின்' மூலம் வழங்குவதற்காக, அமெரிக்காவில் வாழும் பாரதீயர் நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இதை நடத்தினர்.

இந்தப் 'பார்வைக்கான இசை, நடனம்: கலாச்சாரம் மற்றும் கருணையின் கொண்டாட்டம்' நிகழ்ச்சியை நடத்தி 'ஒரு கிராமத்தைத் தத்தெடுக்கும்' கண் மருத்துவ முகாம்களுக்கு ஆதரவாக $150,000 நிதி திரட்டப்பட்டது. இது இந்த ஆண்டின் முதல் நிகழ்வாகும். இதில் சுமார் 500 பேர் பங்கேற்று மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கவுரையில், அறங்காவலர் குழுவின் உறுப்பினர்களான சுதாகர் உப்பலா, இந்திரா தீட்சித் ஆகியோர், "ஒரு பொதுவான நோக்கத்தின் மூலம் பாரதத்தின் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கையை ஒளிரச் செய்வதற்காக நியூ ஜெர்சி ஆர்வலர்கள் இங்கே ஒன்று சேர்ந்துள்ளோம்," என்று கூறினர்.

"நலிந்தோர்க்குச் சேவை செய்யும் எங்கள் பணியை முன்னெடுத்துச் செல்வதில், நியூ ஜெர்சியிலிருந்து கிடைக்கும் உற்சாகமான ஆதரவைக் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்" என்று சங்கர நேத்ராலயா (USA) தலைவர் பாலா ரெட்டி இந்துர்த்தி கூறினார்.

நியூ ஜெர்சி முழுவதிலும் உள்ள லிட்டில் மியூசிஷியன்ஸ் அகாடமி, குச்சிப்புடி டான்ஸ் சென்டர், நாட்டிய தத்வ ஸ்ரீ சாயி வெங்கடேஸ்வரா ஃபைன் ஆர்ட்ஸ், கலகங்கோத்ரி ஃபவுண்டேஷன், சித்தேந்திர குச்சிப்புடி ஆர்ட் அகாடமி, சின்மயி நிருத்யாலயா, சௌபர்ணிகா டான்ஸ் அகாடமி, சைதன்யா ஜுர்ரு, குச்சிந்திரியா டான்ஸ் குரூப் உள்ளிட்ட நடனப் பள்ளிகள், பாரம்பரியக் கதைசொல்லலில் வேரூன்றிய கருப்பொருள் கொண்ட படைப்புகளை வழங்கின. பத்மா மோனா, ராதிகா கன்னி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்புடன் (Fashion Show) கலாச்சார நிகழ்ச்சி நிறைவடைந்தது.

சங்கர நேத்ராலயா (USA)வின் பிராண்ட் தூதரும் ஆலோசகர் குழு உறுப்பினருமான திரு பிரசாத் ரெட்டி கட்டம்ரெட்டி நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். "பார்வையை மட்டுமல்லாமல், கண்ணியத்தையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் ஒரு நற்பணியுடன் இணைந்து நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பாக்கியம்" என்று அவர் குறிப்பிட்டார்.

புரவலர்களான டாக்டர் ராகவ ரெட்டி கோசாலா, டாக்டர் பிரியா கோரப்பாட்டி, வெங்கட் கண்ணன், பிரதாப் ஜக்கா, ஸ்ரீனி & ஜோதி பிக்குமன்லா, சதீஷ் ராமையா பிள்ளை, கலைவாணி பன்னீர்செல்வம், ரவி ரெட்டி மரக்கா, டாக்டர் எஸ். எக்ஞசுப்ரமணியன், டாக்டர் சேஷகுமாரி மூர்த்தி, டாக்டர் ஸ்ரீனிவாச மூர்த்தி, டாக்டர் சந்திபனி சாண்டில்யா, ஸ்ரீனிவாஸ் ஏமானி மற்றும் சங்கர் செட்டி ஆகியோருக்கு சங்கர நேத்ராலயாவின் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கொடை சுமார் 2300 கண்புரை அறுவை சிகிச்சைகளைச் சாத்தியமாக்கும்.

சிறப்பான சேவைக்காக சங்கர நேத்ராலயா தலைவர்களுக்கு நியூ ஜெர்சி செனட் மற்றும் சட்டமன்றத்தின் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. திரு. பிரசாத் ரெட்டி கட்டம்ரெட்டி அவர்களின் தலைமைத்துவம், ஈகை குணம், சமூக சேவை ஆகியவற்றைப் பாராட்டி, நியூ ஜெர்சி மாநில செனட் மற்றும் பொதுச்சபை ஆகியவை இணைந்து ஒரு கூட்டுத் தீர்மானத்தை வெளியிட்டன.



சங்கர நேத்ராலயா USAவின் தலைவரான திரு. பாலா ரெட்டி இந்துர்த்தி, சிறப்பான தலைமைத்துவம் மனிதாபிமான சேவை ஆகியவற்றுக்காக நியூ ஜெர்சி மாநிலம் மற்றும் எடிசன் நகராட்சி ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டார்.

சாய் தத்தா பீடம் மற்றும் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அர்ச்சகர் திரு ரகு சர்மா சங்கரமஞ்சி, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, பிரசாத் ரெட்டி கட்டம் ரெட்டி மற்றும் தலைவர், அறங்காவலர்கள் ஆகியோரை கௌரவிக்க ஒரு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

மார்ச் 15, அன்று கொலம்பஸில் நடைபெறவிருந்த அடுத்த நிகழ்விற்காகப் புறப்பட்ட குழுவினருக்கு, நியூ ஜெர்சி குழுவினர் ஒரு பிரம்மாண்டமான வழியனுப்பு விழாவை நடத்தினர்.

நிகழ்வின் புகைப்படங்களைக் காண:
sankaranethralayausa.org

யூட்யூபில் காண:


மேலும் தகவல்களுக்கும் நன்கொடை அளிக்கவும்:
இணையதளம்: www.sankaranethralayausa.org
கட்டணமில்லாத் தொலைபேசி எண்: (855) 463-8472

வரிவிலக்குப் பெறத்தக்க நன்கொடைகளை (வரி விலக்கு அடையாள எண்: 52-1611548) அஞ்சல் மூலம் அனுப்ப:
Sankara Nethralaya USA, 7238 Muncaster Mill Rd, No. 522, Derwood, MD 20855

தகவல்: முனைவர் அ.போ. இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை, இந்தியா.

© TamilOnline.com