Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
ஹரிமொழி
வரங்களும் ஆயுதங்களும் பெற்றான்
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2019|
Share:
Click Here Enlargeஅர்ஜுனனுக்கு பிரமாஸ்திரத்தைக் காட்டிலும் உக்கிரமான பிரமசிரஸையும் பாசுபதாஸ்திரத்தையும் கொடுத்த சிவபெருமான், அர்ஜுனன் பார்த்துக்கொண்டிருந்தபோதே உமாதேவியாருடன் மறைந்தார். "மஹாதேவரை நான் நேரில் பார்த்தேன்" என்று மிகுந்த ஆச்சரியத்துடன் சொல்லிக்கொண்ட அர்ஜுனன், "அந்தச் சங்கரரைப் பார்த்தது மட்டுமல்லாமல் தொட்டு உணரும் பாக்கியத்தையும் பெற்றேன்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த சமயத்திலேயே அந்த இடத்துக்குத் தேவர் கூட்டத்துடன் வருணன் வந்தான். அவனைத் தொடர்ந்து குபேரன் வந்தான். சூரியபுத்திரனான யமன் இவர்களைத் தொடர்ந்து தன்னுடைய கூட்டத்தாருடன் வந்தான். அடுத்ததாக இந்திரன், இந்திராணியுடன் ஐராவதம் என்ற யானையின்மீது வந்தான். இவர்கள் அனைவரும் ஒன்றுகூடியதும் யமன் அர்ஜுனனைப் பார்த்து, "ஓ! அர்ஜுனா! வந்திருக்கும் லோகபாலர்களான எங்களைப் பார். உனக்கு இப்பொழுது பார்க்கும் திறமையைக் கொடுக்கின்றோம். நீ எங்களைத் தரிசிப்பதற்கு உரியவன். ஓ! ஐயா! அளவிடப்படாத புத்தியுள்ளவனும் அதிக பலமுள்ளவனும் நரன் என்னும் பெயர்பெற்ற பழைய ரிஷியுமான நீ, பிரம்மாவின் உத்தரவினால் மனிதனாய் இருத்தலை அடைந்தாய். ஓ! குற்றமற்றவனே! மிகவும் தர்மத்தில் மனமுள்ளவரும் அதிக வீர்யமுள்ளவரும் வஸுக்களிலிருந்து உண்டானவரும் (உனது) பாட்டனாருமான பீஷ்மரும் உன்னால் போரில் வெல்லப்படத் தகுந்தவர். குருநந்தன! துரோணாசாரியாரால் ரக்ஷிக்கப்பெற்றதும் அக்னிக்கு ஒப்பான பரிசுத்தமுள்ளதுமான க்ஷத்திரிய ஜாதியும் மனிதப் பிறப்பை அடைந்தவர்களும் அதிக வீர்யமுள்ளவர்களுமான அஸுரர்களும் நிவாதகவசர்களும் ஜயிக்கப்படத் தகுந்தவர்கள். ஓ! தனஞ்சய! எல்லா உலகத்தையும் காய்கிறவனும் தேவனுமான என் பிதாவான (சூரியனுடைய) அம்சமான மிகப்பெரிய வீர்யமுள்ள கர்ணனும் உன்னால் கொல்லப்படத் தகுந்தவர்கள்." (வனபர்வம், கைராத பர்வம், அத்.41, பக்.157) என்று வரங்களைத் தந்த யமன், கந்தர்வர், ராட்சஸர் போன்றோருடைய அம்சமாகப் பிறந்தவர்களையும் கொல்வதற்கான வரத்தையும் தந்தான்.

எனவே, பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற பெரும் பராக்கிரமசாலிகளைக் கொல்வதற்கான வரத்தை யமனே அர்ஜுனனுக்குத் தந்தாயிற்று. ஆனால் இவர்களுடைய பராக்கிரமம் மிகப்பெரிது என்பதனால் அர்ஜுனனுக்குத் தன் காரியத்தில் கண்ணனுடைய துணையும் வேண்டியிருந்தது. இந்த வரங்களைத் தந்த யமன் அர்ஜுனனுக்குத் தன்னுடைய தண்டாயுதத்தைத் (கதாயுதத்தைத்) தந்தான். கதாயுதம் பீமனுக்குத்தானே தேவைப்படும்? இதை அர்ஜுனன் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறான் என்று தோன்றலாம். ஆனால் பாண்டவர் ஐவரும் எல்லா ஆயுதங்களிலும் பயிற்சிபெற்றவர்கள். ஜயத்ரத வத சமயத்தில் பீமன் கர்ணனோடு விற்போர் புரிந்து அவனை ஆறேழுமுறை தோற்கடிக்கப் போகிறான். பீமனுக்கு கதாயுதத்திலும், அர்ஜுனனுக்கு வில்லிலும், தர்மனுக்கு வேற்படையிலும் அதிகப் பயிற்சி, மிகவும் தேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் கவனிக்கத் தக்கது. தமிழில் இந்த 'தண்டம்' என்பது அஸ்திரம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைக் கிஸாரி மோஹன் கங்கூலி mace என்று மொழிபெயர்க்கிறார். யமனுடைய தண்டத்தை அர்ஜுனன் அதற்குரிய மந்திரங்களோடும், பிரயோகம், திரும்ப அழைத்தல் முதலான பயிற்சிகளோடும் பெற்றுக்கொண்டான்.

இப்படிப் பலரிடமிருந்து ஆயுதங்களைப் பயிற்சியோடு பெற்றுக்கொண்டதால் இவர்கள் அனைவரும் அர்ஜுனனுடைய குருமார் ஆகிறார்கள். பாண்டு இருக்கும்போது முதலில் இவர்களுக்குப் பயிற்சி தந்த சூரன் என்ற வேடன், கிருபர், துரோணர், அஸ்வத்தாமா, ருத்திரன், யமன், வருணன், குபேரன், இந்திரன், தேவலோகத்தைச் சேர்ந்த சித்திரசேனன் என்ற கந்தர்வன் என அர்ஜுனனுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குருமார்களின் வரிசை வெகுநீளமானது.

இதையடுத்து வருணன் சில அஸ்திரங்களைக் கொடுத்தான். "இவற்றைக் கையில் தரித்துப் போரில் புகுந்தால் உன்னைவெல்ல யமனாலும் முடியாது" என்று வருணன் சொல்கிறான். "O son of Pritha, thou art the foremost of Kshatriyas, and engaged in Kshatriya practices. O thou of large coppery eyes, behold me! I am Varuna, the lord of waters. Hurled by me, my nooses are incapable of being resisted. O son of Kunti, accept of me these Varuna weapons along with the mysteries of hurling and withdrawing them. With these, O hero, in the battle that ensued of your on account of Taraka (the wife of Vrihaspati), thousands of mighty Daityas were seized and tied. Accept them of me. Even if Yama himself be thy foe, with these in thy hands, he will not be able to escape from thee" என்று கிஸாரி மோகன் கங்கூலி இந்த இடத்தை மொழிபெயர்க்கிறார். அனைத்துத் திவ்யாஸ்திரங்களும் வருணனிடத்தில்தான் கொடுத்து வைக்கப்படும். அந்தந்த அஸ்திரங்களுடைய பயன்பாடும் அவற்றுக்கான கால எல்லையும் முடிந்தபிறகு அவை வருணனிடத்தில் திரும்பிவிடும். ராமாயணத்திலும், பாரதத்திலும் இப்படி நிகழ்வதைப் பல இடங்களில் பார்க்கலாம்.
அதைத் தொடர்ந்து குபேரன் தன்னுடைய சில அஸ்திரங்களைத் தந்து, "இவற்றைக் கொண்டு நீ துரியோதனனுடைய சைனியத்தை எரித்துவிடுவாய்" என்று சொல்லி, தனக்கு மிகவும் பிரியமான அந்தர்தானாஸ்திரத்தைக் கொடுக்கிறான். "O mighty-armed one! O Savyasachi! Earlier, you were an eternal god. In an earlier era, your endeavours were always at our side. Accept this favourite weapon of mine, known as antardhana. It is energetic, vigorous and resplendent. O destroyer of enemies! It can put the enemy to sleep." Then the mighty-armed Arjuna, descendant of the Kuru lineage, accepted Kubera’s divine weapon in accordance with the rites. (The Mahabharata: Volume 2, p. 393) என்று BORI பதிப்பை மொழிபெயர்த்த பிபேக் தேப்ராய் இந்த இடத்தை மொழிபெயர்க்கிறார். பகைவர்களை மயங்கச் செய்யும் இன்னொரு—ஆனால் இதைவிட மென்மையான தன்மையுள்ள—ஸம்மோஹனாஸ்திரத்தை அர்ஜுனன் விராட பர்வத்தில் கௌரவ சைனியத்துடன் நடந்த போரில் பீஷ்மர் உள்ளிட்ட கௌரவ சேனையின் மீது பிரயோகிக்கப் போகிறான். அதை உரிய இடத்தில் பார்ப்போம். குபேரன் அர்ஜுனனிடத்தில் இப்போது தந்திருக்கும் அந்தர்தானாஸ்திரத்தை சங்கரனார் திரிபுரங்களை அழித்தபோது பயன்படுத்தியதாகத் தமிழ் மொழிபெயர்ப்பும் கிஸாரிமோகன் மொழிபெயர்ப்பும் சொல்கின்றன. When the illustrious Sankara slew Tripura, even this was the weapon which he shot and by which many mighty Asuras were consumed. என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு. இந்தக் குறிப்பு, BORI-யின் கிரிடிகல் எடிஷனில் இல்லை.

இப்படி இந்த தேவர்களிடமிருந்து அர்ஜுனன் ஆயுதங்களைப் பெற்றதும் இந்திரன் அர்ஜுனனைப் பார்த்து, உனக்கு மற்ற பல ஆயுதங்களை நீ இந்திரலோகத்துக்கு வந்ததும் தருகிறேன். இந்திரலோகத்துக்கு வர நீ தயாராகு. என்னுடைய சாரதியான மாதலியையும் என்னுடைய தேரையும் நான் அனுப்பி வைக்கிறேன்' என்றான். Then the chief of the celestials addressing Pritha's son of ceaseless deeds in sweet words, said, in a voice deep as that the clouds or the kettle-drum, 'O thou mighty-armed son of Kunti, thou art an ancient god. Thou hast already achieved the highest success, and acquired the statue of a god. But, O represser of foes, thou hast yet to accomplish the purposes of the gods. Thou must ascend to heaven. Therefore prepare thou O hero of great splendour! My own car with Matali as charioteer, will soon descend on the earth. Taking thee, O Kaurava, to heaven, I will grant thee there all my celestial weapons.'" என்று இந்த இடத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார்.

அடுத்ததாக அர்ஜுனன் தேவலோகத்துக்குச் செல்கிறான். சென்றதும் 'நபும்சகனாகக் கடவாய்' என்று ஊர்வசியின் சாபத்தைப் பெற்றுக்கொள்கிறான். இந்தச் சாபம்தான் பதின்மூன்றாவது வருடமான அக்ஞாத வாச காலத்தில் அர்ஜுனன் அடையாளம் காணப்பட முடியாத பிருஹன்னளையாக மாறப் பயன்படப் போகிறது. இந்த விவரங்களை அடுத்துப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: