Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சாதனையாளர்
லிடியன் நாதஸ்வரம்
- அரவிந்த்|அக்டோபர் 2019|
Share:
நாதஸ்வரம் வாசிக்கக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நாதஸ்வரமே பியானோ வாசிக்கக் கேட்டதுண்டா? உலகமே கேட்டு வியந்ததுண்டு. ஏனென்றால் இந்தக் குட்டி இசைமேதையின் பெயரே லிடியன் நாதஸ்வரம் தான்.

கலிஃபோர்னியாவில் CBS The World's Best இசைத்திறன் போட்டி அது. 2019 ஃபிப்ரவரி மாதம் துவங்கிய இந்தப் போட்டியில் பல்வேறு நாட்டுக் கலைஞர்கள் குழுவாகவும், தனியாகவும் பங்கேற்கின்றனர். 38 நாடுகளைச் சேர்ந்த 50 இசை மேதைகள் நடுவர்களாக இருந்தனர். இறுதிச் சுற்றின் நடுவர்களாக Drew Barrymore, RuPaul Charles, Faith Hill அமர்ந்திருக்க, ஜேம்ஸ் கார்டன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அவர்கள்முன் பியானோ வாசிக்கிறான் 12 வயது லிடியன். சவாலான Flight of the bumblebee இசைக்கோவையை அநாயசமாக வாசித்ததோடு நிற்கவில்லை; நிமிடத்திற்கு 208 பீட்ஸ், 325 பீட்ஸ் என்று வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய் அதற்குத் தக வாசிக்க, நடுவர்கள் வாய் பிளந்து, மூச்சுவிட மறந்து பார்த்தார்கள். அடுத்தடுத்து ஹாரிபாட்டர், மிஷன் இம்பாஸிபிள், சூப்பர் மேன், ஜுராஸிக் பார்க் படங்களின் தீம் இசையை வாசித்து அசத்த அரங்கில் ஓயாத விசில் மற்றும் கரவொலி. மட்டுமா, மொட்ஸார்ட்டின் படைப்பை இரு கண்களையும் கட்டிக்கொண்டு அவன் வாசித்தவிதம், நடுவர்களின் விழிகளை அரையடி அகலம் விரிய வைத்தது!.



அத்தோடு முடியவில்லை லிடியனின் பராக்கிரமம். ஒரே நேரத்தில் இரண்டு கைகளால், இரு வேறு பியானோக்களை அவன் வாசிக்கத் துவங்கியதும் அரங்கில் தொடர் கரவொலி. தொகுப்பாளர், பார்வையாளர்கள், நடுவர்கள் என அனைவரும் மெய்மறந்தனர். சிறுவனின் திறமை கண்டு பல கண்களில் ஆனந்தக் கண்ணீர். மொழி, மதம், இனம் கடந்த இசை, அங்கு எல்லோரது மனதையும் கட்டிப்போட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த குக்கியான் ஆடல், இசைக் குழுவினருடன் போட்டியிட்டு இறுதிச் சுற்றில் 84 வாக்குகளுடன் போட்டியில் வென்றான் அவன். (அந்த உணர்ச்சிகரமான காட்சியைப் பார்க்க)

இந்தச் சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம், சென்னையைச் சேர்ந்தவன். தந்தை வர்ஷன் சதீஷும், மகன் லிடியன் நாதஸ்வரமும் அரங்கில் ஒருவரை ஒருவர் தழுவி வெற்றியைப் பரிமாறிக் கொண்ட காட்சி சரித்திரத்தில் இடம்பெறும்.

லிடியனுக்கு முளையிலேயே இசையார்வம் இருந்தது. இரண்டு வயதில் சைலோஃபோன் கருவியை லிடியன் வாசிப்பதைக் கண்டு வியந்த தந்தை வர்ஷன், அவனது இசை தாகத்தை உணர்ந்து கொண்டார். தானே ஓர் இசைக்கலைஞர் என்பதால் மகனுக்கு டிரம்ஸ் வாங்கித் தந்து பயிற்றினார். லிடியனுக்கு எட்டு வயதாக இருந்தபோது, அக்கா அமிர்தவர்ஷினி பியானோ இசைப்பதைப் பார்த்த லிடியன், தானும் அப்படியே அநாயாசமாக வாசிக்கவே, தன் குழந்தைகளுக்குப் படிப்பை இரண்டாம் பட்சமாக வைத்துவிட்டு, இசை கற்றுத்தர ஆரம்பித்தார் வர்ஷன். அம்மா ஜான்ஸியும் அதற்கு முழு ஆதரவு.



Madras Musical Associationன் இசையமைப்பாளர் அகஸ்டின் பாலிடம் இசை நுணுக்கங்களைக் கற்றான் லிடியன். டிரம்ஸ், பியானோ மட்டுமல்லாமல் கிடார், மிருதங்கம், வயலின், தபேலா என்று பல கருவிகளை வாசிக்கக் கற்றான். இவரது திறமையை அறிந்த ஏ.ஆர். ரஹ்மான், தனது கே.எம். காலேஜ் ஆப் மியூசிக்கில் லிடியன் சேர்ந்து பயில வாய்ப்பளித்தார். அங்கு ரஹ்மானின் முன்னிலையில் பல இசை நுணுக்கங்களை அறிந்தான் லிடியன். உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றதுடன், பரிசுகளையும் பாராட்டுக்களையும் குவித்தான். அதன் மகுடம்தான் உலக அளவில் 'தி வேர்ல்ட் பெஸ்ட்' போட்டிகளில் ஒரு மில்லியன் டாலர் வென்றது.

லிடியனுக்கான பாராட்டு விழாவைத் தானே முன்னின்று நடத்திய ஏ.ஆர். ரஹ்மான், “இசைக்கான உலகத் தூதுவராக லிடியன் வரவேண்டும். அதற்கான தகுதி இவருக்கு இருக்கிறது" என்று பாராட்டினார்.

2023ம் ஆண்டு எலான் மஸ்க்கின் தலைமையில் நிலவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் லிடியன் நாதஸ்வரத்தின் தற்போதைய கனவு. கனவுகள் நிறைவேற வாழ்த்துவோம்.

Lydian Nadhaswaram official என்பது லிடியனின் அதிகாரபூர்வ யூட்யூப் சேனல்.
லிடியனின் ஃபேஸ்புக் பக்கம்



அரவிந்த்
Share: