Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அமங்கலமான மங்கலம்-Jul 2015
4 Comments
By: Hari Krishnan (India) Aug 03, 2015 - My other reviews << Return to Article
திரு சின்னஸ்வாமி அவர்களே. அஸ்வத்தாமன் திரும்ப அழைக்கமுடியாமல் போனது பிரமாஸ்திரம் அன்று. அது பிரமசிரசாஸ்திரம். இதை எடுக்கவும் தொடுக்கவும் மட்டுந்தான் அஸ்வத்தாமனுக்குப் பயிற்சியளித்தார் துரோணர். திரும்ப வாங்குவதற்கான பயிற்சியை அளிக்கவில்லை. துரோணர் எவ்வளவு நியாயம் தவறாத குரு என்பதை விளக்கும் சம்பவம் இது. இந்த அரைகுறைப் பயிற்சியால் பெற்ற பிரமசிரசாஸ்திரத்தை ‘இவன் என்னிடத்திலே கொண்டுவந்து கொடுத்து, இதை வைத்துக் கொண்டு உன் சக்ராயுதத்தைக் கொடு என்று கேட்டான். அதோ அங்கே இருக்கிறது, உன்னால் அதைத் தூக்க முடியுமானால் நீ எடுத்துக் கொண்டு போகலாம்’ என்று சொல்லிவிட்டேன். நான் ஒரு ஆட்காட்டி விரலால் தாங்கும் இந்தச் சக்கரப்படையை இவன் இரண்டு கைகளால் பலங்கொண்டவரையில் முயன்றும் அசைக்கவும் முடியவில்லை. ஆகவே அவனுக்கு வேறு தானங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்’ என்று அர்ஜுனனிடத்தில் கண்ணன் சொல்கிறான்--உறங்குகின்ற உபபாண்டவர்களை அஸ்வத்தாமன் கொன்றுவிட்டான் என்று தெரிந்ததும் அவனைத் தேடிக்கொண்டு இருவரும் புறப்பட்ட சமயத்தில். தற்போதைய விவரங்களை முடித்துக் கொண்டு அங்கே வருகிறேன். இதுபோன்ற கேள்விகளை வரவேற்கிறேன். மிக்க நன்றி திரு சின்னஸ்வாமி அவர்களே.

By: Chinnaswamy (India) Aug 01, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். எனக்கு நெடு நாட்களாக ஒரு சந்தேகம். அஸ்வத்தாமா துரோணருடைய பிள்ளையாய் இருந்தும் ப்ரும்மாஸ்திரத்தை திரும்ப அழைக்க எனக்கு தெரியவில்லை என்று ஏன் சொல்லவேண்டும்? அர்ஜூனனுக்கு தெரிந்தது இவனுக்கு எப்படி தெரியாமல் போயிற்று? இப்படிக்கு உங்கள் ரசிகன் VCS

By: Krishna Achutha (India) Jul 08, 2015 - My other reviews << Return to Article
Hari Krishnan, happy to read your article.

By: Chinnaswamy (India) Jul 04, 2015 - My other reviews << Return to Article
அப்பாடா!! போன மாதம் 10 தேதி வரை காணாதது இந்த மாதம் 4 தேதிக்கே ஹரிமொழியின் கட்டுரையை காண முடிகிறது ஒரு நல்ல சகுனம் என்றே கொள்கிறேன்.





© Copyright 2020 Tamilonline