Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சான் ஹோசே: நவராத்திரி விழா
STF: 8வது ஆண்டு நிதி திரட்டும் விழா
கனடா: 'சந்தியாராகம்' மூத்தோர் பாட்டுப் போட்டி
BATM: முத்தமிழ் விழா 2018
BATM: தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு
அரங்கேற்றம்: சஹானா ராஜேஷ்
அரங்கேற்றம்: திவ்யா ஸ்ரீதர்
அரங்கேற்றம்: ப்ரீத்தி நாராயண்
- து.சீ. இராமலிங்கம்|நவம்பர் 2018|
Share:
ஆகஸ்ட் 5, 2018 ஞாயிறன்று அட்லாண்டா திருமதி சவிதா விஸ்வநாதன் அவர்களின் நிருத்ய சங்கல்பா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி ப்ரீத்தி நாராயணின் பரதநாட்டிய அரங்கேற்றம், அட்லாண்டா ராஸ்வெல் கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்தில் நடைபெற்றது.

ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த நடேச கவுத்துவத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. "சிதம்பரேஸ்வர" ஸ்தோத்திரத்துடன் ஸ்ரீ நடராஜரை வணங்கியது தெய்வாம்சம் நிறைந்திருந்தது. அடுத்து, "தேவி நீயே துணை" என்ற பாபநாசம் சிவனின் கீர்த்தனை, கீரவாணி ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி வணங்குவதாகச் சிறப்பாக இருந்தது.

அடுத்து மூலைவீட்டு ரங்கசாமி நட்டுவனாரின் வர்ணம் , நாட்டக்குறிஞ்சி ராகத்தில் ஸ்ரீரங்கநாதரைப் புகழ்ந்து பாடிய பாடலுக்கு ஆடியவிதம், ஸ்ரீரங்கம் கோயிலில் இருப்பது போன்று உணர்வைத் தோற்றியது. தொடர்ந்து, கல்யாணி ராகத்தில் "தையலே" என்று துவங்கும் ஸ்ரீ முருகப்பெருமானைப் பற்றிய பாடலுக்குத் தலைவியிடம் தோழி பரிந்து கூறும்விதமாக அமைந்த நடனத்தில் முகபாவங்களைக் காட்டியவிதம் அருமை.

அடுத்து தர்மபுரி சுப்பராயரின் கமாஸ் ராகத்தில் 'ஏரா ரா ரா' என்ற தெலுங்குப்பாடல், ஸ்ரீராமர் நாமத்தை சொல்லும் 'பஜமன ராம சரண சுகதாயி' என்ற கோஸ்வாமி துளசிதாஸரின் பாடல், ராகமாலிகைப் பாடல் ஆகியவற்றுக்கு ஷீஜித் கிருஷ்ணாவின் நடன அமைப்பில் அவர் ஆடியது சிறப்பு.
முத்தாய்ப்பாக சிம்மேந்திரமத்யமத் தில்லானாவைத் துரிதகதியில் ஆடியது அமர்க்களமாக இருந்தது. பாடலுக்கு ஏற்றபடி நிறைவாக ஸ்ரீகிருஷ்ணரை உருவகப்படுத்தி வணங்கியது பிரமிப்பாக இருந்தது. நிறைவாக மங்களத்தில், வழிபாட்டுப் பாடலுடன், குரு மற்றும் வாத்தியக்குழுவினர், பார்வையாளர்கள் ஆகியோருக்கு நன்றி கூறி வணங்கினார். அரங்கேற்றம் பலத்த கரவொலியுடன் இனிதே நிறைவடைந்தது.

குரு சவிதா விஸ்வநாதன் (நட்டுவாங்கம்), திருமதி ஜோதிஷ்மதி ஷீஜித் கிருஷ்ணா (வாய்ப்பாட்டு), திரு ஷீஜித் கிருஷ்ணா (மிருதங்கம்), திரு G.S. ராஜன் (புல்லாங்குழல்), திரு லட்சுமி நாராயணன் (வயலின்) ஆகியோரின் வாசிப்பு நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பக்கபலம்.

17 வருடங்களாக கலாக்ஷேத்ரா பாணியில் நாட்டியம் பயிற்றுவித்து வரும் திருமதி சவிதா விஸ்வநாதனிடம், 12 வருடங்களாக பரதம் பயின்றுவரும் ப்ரீத்தி, இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த நிதியை Behaviour Momentum India (BMI) என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.

து.சீ. இராமலிங்கம்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

சான் ஹோசே: நவராத்திரி விழா
STF: 8வது ஆண்டு நிதி திரட்டும் விழா
கனடா: 'சந்தியாராகம்' மூத்தோர் பாட்டுப் போட்டி
BATM: முத்தமிழ் விழா 2018
BATM: தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு
அரங்கேற்றம்: சஹானா ராஜேஷ்
அரங்கேற்றம்: திவ்யா ஸ்ரீதர்
Share: 




© Copyright 2020 Tamilonline