Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் தேனிசை மழை
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
SIFA-வின் வெள்ளிவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா
சான் ஹோசேயில்...
தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட்
நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா
இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ
- ஜோலியட் ரகு|ஜூலை 2004|
Share:
Click Here Enlargeமே 22, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவிலில் பாம்பே ஜெயஸ்ரீயின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. பல அருமையான பாடல்களை அவர் பாடினார். 'தேவ தேவ' என்ற பூர்வி கல்யாணி ராகத்தில் ஆரம்பித்த கச்சேரி அடுத்து அசாவேரி, தர்பார் என்று மெருகேறியது. 'ஸ்ரீலக்ஷ்மி வராகம்' என்ற ஆபோகி ராகக் கீர்த்தனையை கேட்டவுடன், இவ்வளவு நல்ல ஆபோகியைக் கேட்டு மிகுந்த நாட்களாகிவிட்டதே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அடுத்து வந்த காம்போதி ராக 'ஓரங்கசாயி' தேவாமிரதம். இடையில் பாபநாசம் சிவனின் 'காவாவா' என்ற பாடலும் சளைத்ததில்லை. சண்முகப்பிரியாவில் ஆரம்பித்த ராகம், தானம், பல்லவி, திலங், ரஞ்சனி, கலாவதி என்று விலாவரியாகப் பாடிய போது, காதிற்குத் தேன் விருந்துதான் போங்கள். பாகேஸ்வரியில் 'கண்டேன் கண்டேன்' என்ற பாடலும், சிந்துபைரவியில் காளி மகேஸ்வரி பஜனும் இனித்த கல்கண்டு. 'கிருஷ்ணா நீ பேகனே' இல்லாமல் சிகாகோ ரசிகர்கள் விடுவார்களா? அதுவும், தர்பாரி கானடாவில் அமைந்த 'சர்வம் பிரும்ம மயம்' என்ற பாடலும் ரசிகர்களின் விருப்பப் பாடல்கள். தேஷில் அமைந்த தில்லானா விற்கு ஒரு பேஷ்.

ஜெயஸ்ரீக்கு ஈடுகொடுத்து பக்கவாத்தியம் வாசித்த வயலின் ஹரிபாஸ்கரும், மிருதங்கச் சக்கரவர்த்தி பூங்குலம் சுப்ரமணியனும் அசத்திவிட்டனர்.
ஜோலியட் ரகு
More

சிகாகோவில் தேனிசை மழை
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
SIFA-வின் வெள்ளிவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா
சான் ஹோசேயில்...
தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட்
நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா
இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline