கணிதப்புதிர்கள்
1. ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1/2 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா 1/4 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் பிரித்துக் கொண்ட அவர்களது எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர் அதனைப் பகிர்ந்து கொண்டிருப்பர்?

2. ராஜேஷ் தன் வீட்டில் மைனா, புறா, கிளி, கோழி ஆகிய பறவைகளையும், நாய், பூனை ஆகிய மிருகங்களையும் வளர்த்தார். மொத்தம் எத்தனை வளர்ப்புப் பிராணிகள் எனக் கேட்டற்கு, அவை ஒவ்வொன்றும் எண்ணிக்கையில் சமம் என்றும், ஆனால் அவற்றின் கால்களின் மொத்த எண்ணிக்கை 128 என்றும் கூறினார். அப்படியென்றால் அவரிடம் உள்ள வளர்ப்புப் பிராணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

3. ஒரு குடும்பத்தில் மூன்று தந்தைகள், மூன்று மகன்கள் இருந்தனர். ஒரு தந்தை தனது மகனுக்குப் பொங்கல் பரிசாக 200 டாலர் கொடுத்தார். மற்றொரு தந்தை தன் மகனுக்கு 150 டாலர் கொடுத்தார். இன்னுமொரு தந்தை தன் மகனுக்கு 100 டாலர் கொடுத்தார். ஆனால் மகன்கள் மூவரிடம் இருக்கும் மொத்தத் தொகையைக் கூட்டிப்பார்த்தால் மொத்தம் 200 டாலர் மட்டுமே இருந்தது. எப்படி?

4. சங்கரின் வயதைவிட சந்திரனின் வயது 5 குறைவு. ரமேஷின் வயது சங்கரின் வயதை விட 5 அதிகம். மூவரின் வயதையும் கூட்டினால் வரும் தொகை ரமேஷின் வயதை விட 25 அதிகம் என்றால் மூவரின் தனித்தனி வயதுகள் என்ன?

5. தொடர்ச்சியான ஒன்பது வீட்டு எண்களின் கூட்டுத்தொகை 9999. அதில் மிகச்சிறிய எண் என்னவாக இருக்கும்? மிகப்பெரிய எண் எது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com