BATM: சங்க இலக்கியப் பயிலரங்கம்
2014 மார்ச் 28-29 தேதிகளில் சங்க இலக்கியப் பயிலரங்கம் ஒன்றை வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்குகிறது. இதில் திருமதி. வைதேகி ஹெர்பெர்ட் அவர்கள் எளிய தமிழிலும், ஆங்கிலத்திலும் விரிவுரை அளிப்பார். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, ஆகியவை காட்டும் தமிழர் வாழ்க்கை, பண்பாடு ஆகியவற்றை விவரிப்பார். பயிலரங்கம் Coconut Hall (46129 Warm Springs Blvd., Fremont, CA 94539) அரங்கில் தினமும் காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். கட்டணம் $125. சங்க இலக்கிய உரை, பயிற்சிப் புத்தகங்களுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கும், பதியவும்: www.bayareatamilmanram.org

அப்துல்லா கான்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com