வஜ்ரம்


"கல்விதான் ஒரு குடும்பத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும்" என்ற கருத்தை முன்வைத்து உருவாகும் படம் வஜ்ரம். 'பசங்க', 'கோலிசோடா' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாயகியாக பவானிரெட்டி அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரமேஷ் செல்வன் இயக்குகிறார். ஆதரவற்ற சிறுவர்களுக்காக நடத்தப்படும் பள்ளி ஒன்றை எதிரிகள் அபகரிக்கின்றனர். மாணவர்கள் அனைவரும் குற்றம்சாட்டப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். அதிலிருந்து நான்கு சிறுவர்கள் தப்பி எப்படிப் பள்ளியை மீட்கின்றனர் என்பது படத்தின் கதையாம். மனசுல ஒட்றாமாரி கததான்!

அரவிந்த்

© TamilOnline.com