'பெட்டிக்கடை இன்று விடுமுறை'


பெட்டிக்கடைகளே காணாமல் போய்க்கொண்டிருக்கும் வேளையில், "பெட்டிக்கடை இன்று விடுமுறை" என்ற பெயரில் உருவாகி வருகிறது ஒரு புதுப்படம். நாயகனாக வீரா நடிக்க, புதுமுக நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். ஆர். சுந்தர்ராஜன், செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் கார்வண்ணன் படத்தை இயக்குகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைக்கதை இது என்று கூறும் அவர், "இது இன்றைய இளைஞர்களின் அப்பாக்களின் காதல்கதை. மண்ணின் மணம் மாறாத யதார்த்த பதிவாக இது இருக்கும். படத்தில் வரும் கில்லி விளையாட்டு இரண்டு ஊர்ப்பகை வருமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது'' என்கிறார். எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வசனம். இசை: மரியா மனோகர்.

அரவிந்த்

© TamilOnline.com