த்ரிஷா இல்லன்னா நயன்தாரா


இசையமைப்பாளராகத் தன் தனித்திறமையை நிரூபித்துக் காட்டிய ஜி.வி. பிரகாஷ்குமார் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். பென்சில், டார்லிங் படங்களைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்கும் படம் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'. நாயகியாக ஆனந்தி நடிக்கிறார். புதுமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்தில் ஜி.வி. பிரகாஷ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாம். இசையும் அவரே. "அப்பாவி இளைஞனின் காதலும் அதில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களுமே 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com