தெரியுமா?: இணையத்தில் வீடு, மனை வாங்க CREDAI FAIRPRO 2015
IndiaProperty.com அமைப்பு சென்னை CREDAI உடன் சேர்ந்து ஆன்லைனில் வீடு, மனைகள் வாங்க வசதி ஏற்படுத்தியுள்ளது. 2015 ஃபிப்ரவரி 22ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதிவரை இந்தச் சொத்து எக்ஸ்போ www.indiaproperty.com/fairpro2015 என்ற வலையகத்தில் திறந்திருக்கும்.

சிறந்த 85 நிலம் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் இதில் பங்கேற்பதால், இணையத்திலேயே சென்னை மற்றும் அதனையொட்டிய ஏராளமான வீடு, நிலங்களைப் பார்த்து, உங்கள் தேவைக்கேற்றதை முன்பதிவு செய்யும் மெய்யான மின்வணிக வசதியாக இது அமைகிறது. முதன்முறையாகச் செல்ஃபோன் வழியே முன்பதிவுசெய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

TruView தொழில்நுட்பம்மூலம் இடத்தைப் பறவைப் பார்வையாகவோ, அடுக்குமாடிக் கட்டடமாகவோ மட்டுமல்லாமல், வாங்க விரும்பும் இல்லத்தின் உள்பகுதியைக்கூடப் பார்க்கமுடியும். இவையெல்லாம் முப்பரிமாண, மெய்நிகர் சுற்றுலாவாக (Virtual Tour) காணக் கிடைக்கும்! முன்பணம் செலுத்தவும் பாதுகாப்பாகத் தொகை செலுத்தும் மின்வாசல் (secured payment gateway) உண்டு.

இந்தியா ப்ராபர்டி.காம் நிறுவனத்தின் CEO திரு. கணேஷ் வாசுதேவன், "CREDAI போன்ற அமைப்பு இந்தப் பெரிய எக்ஸ்போவைச் செய்ய எங்களைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி" என்கிறார். தொழில்நுட்பம் எத்தகைய வாய்ப்புக்களை உங்கள் விரல்நுனியில் கொண்டுதருகிறது என்பது வியப்பான விஷயம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com