சதுரங்கப் புலி
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம். விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.

புதிர் 13புதிர் 14

White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக

Checkmate in 3 - மூன்று நகர்த்தலில் செக்மேட் செய்க

சென்ற இதழில் புதிர்கள் சற்றே கடினமானவைதாம். விடாதீர்கள், தொடர்ந்து முயலுங்கள். இரண்டு புதிர்களுக்கும் சரியான விடை அனுப்பியவர்கள்:

ஏரஹன் ஸ்கந்தகுமார் - போலிங்புரூக், இல்லினாய்ஸ்
ராஜ்மோஹன் மணி - சன்னிவேல், கலிஃபோர்னியா

புதிர் 11க்குப் பலர் சரியான விடை அனுப்பியிருந்த போதிலும் 12ஐத் தீர்க்கவில்லை.

விடைகள்:
புதிர் 11 - g8=Q Kh5, Qg3 Kh6, Qg6 #
புதிர் 12 - Re5 Kf8, Rg5 Ke8, R98 #

© TamilOnline.com