சூர்யா-ஜோதிகா-அசின் கூட்டணி
சூர்யாவின் சகோதரர் கார்த்திக் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'பருத்தி வீரன்' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல். இவர் அடுத்துத் தயாரிக்கவிருக்கும் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலக்கும் சூர்யா இப்படத்திலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

'ஜில்லுன்னு ஒரு காதல்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்கின்றனர் சூர்யாவும், ஜோதிகாவும். போதாததற்கு அசின் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார்.

கவிஞர் வாலி பாடல்களை எழுத, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கத்தைக் கிருஷ்ணா கவனிக்கிறார். உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com