கலக்குகிறார் சத்யராஜ்
இன்று தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்களைக் கையில் வைத்திருப்பவர் விஜய், அஜித் அல்லது சூர்யா என்று நீங்கள் நினைத்தால், அது தவறு!

அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருப் பவர் சத்யராஜ் என்பதுதான் உண்மை. சுமார் அரை டஜன் படங்களில் நாயகனாக நடிக்கிறார் இந்தக் கோயம்புத்தூர்க்காரர். சமீபத்தில் வந்த 'இங்கிலீஷ்காரன்' வெற்றி பெற்றதையடுத்து அதைத் தயாரித்த ஷக்தி சிதம்பரம் 'கோவை பிரதர்ஸ்' படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார்.

மகன் சிபிராஜ் சத்யராஜோடு இணைந்து நடிக்கும் 'கோவை பிரதர்ஸ்' படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறார் நமீதா. வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க விருக்கிறார். இசை டி. இமான், ஒளிப்பதிவு சுரேஷ் தேவா கவனிக்கிறார்.

மிகக் குறுகிய காலத் தயாரிப்பாகவிருக்கும் 'கோவை பிரதர்ஸ்' பிப்ரவரி 2006-ல் வெள்ளித் திரைக்கு வரும்.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com