நெவார்க்: சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு
2015 ஜனவரி 23-25 தேதிகளில் கலிஃபோர்னியாவின் நெவார்க் நகரில் அமைந்துள்ள சங்கடமோசன ஹனுமார் கோவிலில் (35463 Dumbarton Ct, Newark, CA 94560) ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனை பண்டிட் கோவிந்த ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையிலான குழுவினர் நடத்திக் கொடுத்தனர்.

இதில் இசைக்கலைஞர் திருமதி. ஹேமா சிஸ்டா, வீணைக்கலைஞர் திரு. ஸ்ரீகாந்த் சாரி, குரு திருமதி. சாந்தி சதீஷ் மற்றும் ஸ்ரீ ஞானாநந்த பஜனை சமாஜ குழுவினரும் பங்கேற்று பக்தியிசை வழங்கினர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com