சாஸ்தா அறக்கட்டளை: உணவுப்பொருள் வழங்கல்
நவம்பர் 27, 2014 நன்றி நவிலல் நாளன்று, டாலஸ் சாஸ்தா அறக்கட்டளை, தன்னார்வலர்களோடு இணைந்து Basket Brigade-2014 சேவையை இவ்வாண்டும் செய்தது. அன்றைக்கு ஆதரவற்றோர் மற்றும் போதுமான வருமானம் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் 50 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. உதவி பெற்றவர்களின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியை வெகுமதியாகக் கொண்டு தொண்டர்கள் இன்புற்றனர்.

சித்ரா ரத்தினம்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com