மாஸ்
'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் 'மாஸ்'. நாயகிகளாக நயன்தாரா, எமி ஜாக்ஸன், ப்ரணிதா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரேம்ஜி அமர், ஜெயராம், சமுத்திரக்கனி, பார்த்திபன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல ஆவி, பேய்களும் உடன் நடித்திருப்பதாகக் கேள்வி. மதன்கார்க்கி பாடல்களை எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்காகப் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்ததாம்.



அரவிந்த்

© TamilOnline.com