சிறுகதைத் துறையின் பேரிழப்பு
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த மிக முக்கியமான எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் ஒருவர். தமிழில் வெளி வந்த நாவல்களில் 10 நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தால் அதில் ஒன்றாகக் கட்டாயம் 'ஒரு புளிய மரத்தின் கதை' இருக்கும். வற்றாத உற்சாகத்தோடு சிறிதும் படைப் பாற்றல் குன்றாமல் இறுதிவரை மணிமணியான சிறுகதைகளை அவர் எழுதிக்கொண்டிருந்தார்.

அவரது 'விகாசம்' என்ற சிறுகதை கால்குலேட்டர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அந்தச் சிந்தனையை மையப்படுத்தி எழுதப்பட்ட உயர்தரச் சிறுகதை.

இலக்கியத்தின் பல துறைகளில் அவர் உழைத்தாலும், அவரது இறப்பு சிறுகதைத் துறைக்கு நேர்ந்த பேரிழப்பு.

திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர், அமுதசுரபி

© TamilOnline.com