ஓட்ஸ் பொங்கல்ஸ்!
ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 1/2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
பால் - 1 கிண்ணம்
வெல்லம் (பொடித்தது) - 1 1/2 கிண்ணம்
நெய் - 1 கிண்ணம்
ஏலக்காய் - 8
முந்திரிப் பருப்பு - 10
திராட்சை - சிறிதளவு
பாதாம்பருப்பு (அரைத்த விழுது) - 1/2 கிண்ணம்

செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்துப் பொடியாக எடுக்கவும். பயத்தம்பருப்பை வாசனை வர வறுத்து வேகவிடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை வறுத்துக் கொள்ளவும். பாலில் ஓட்ஸை வேகவிட்டுக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெல்லம் போட்டுக் கரைந்து கொதிக்கும்போது வேகவைத்த ஓட்ஸ், பயத்தம்பருப்பு, பாதாம் விழுது எல்லாம் போட்டுக் கொதிக்கவிடவும். நடுநடுவே நெய் சேர்ந்து, சுற்றிலும் நெய்க் கொதி வரும்போது இறக்கி முந்திரி, திராட்சை, ஏலம் சேர்த்துப் பரிமாறவும். ஓட்ஸைப் பொடி செய்யாமல் முழுதாக வேகவிட்டும் செய்யலாம். ஓட்ஸ் சீக்கிரம் வெந்து விடும். ஆகையால் ரொம்பக் குழையாமல் செய்யவும். இனிப்பு ஓட்ஸ் பொங்கல் தயார்!

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com