மானே தேனே பேயே


கிருஷ்ணா இயக்கும் படம் 'மானே தேனே பேயே'. ஆரி நாயகன், கீர்த்தி சுரேஷ் நாயகி. சென்ட்ராயன், மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வசனத்தை ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார். யுகபாரதி, விவேகாவுடன் இயக்குநர் கிருஷ்ணாவும் பாடல்களை எழுதியிருக்கிறார். சத்யா இசையமைக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கிருஷ்ணா. "என்னோட 'சில்லுனு ஒரு காதல்' காதல் கலந்த குடும்பப் படம். "நெடுஞ்சாலை" படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டது. ஆனால் 'மானே தேனே பேயே' அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக இருக்கும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com