களம்


அமானுஷ்யக் கதை கொண்ட திகில் படம் 'களம்'. ஒரு களத்தில் என்ன நடக்கிறது என்பதே திரைக்கதை. "அமானுஷ்ய சக்திகள் பற்றிய படங்கள் நிறைய வந்திருக்கிறது. அது காற்றாகவோ, பேயாகவோ, ஏதோ ஒன்றாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு களம்தான் அமானுஷ்ய சக்தி. புதுமையான கதையம்சத்துடன் உருவாகி வருகிறது. ஆரி அலெக்சா கூக்ஸ் எஸ் 4 என்ற நவீன கேமரா கொண்டு படமாக்கி வருகிறோம்" என்கிறார் இயக்குனர் எஸ். ராஜ். இவர், ஜீவா சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். ஸ்ரீனி, லக்ஷ்மிபிரியா, மதுசூதனன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு இசை பிரகாஷ் நிக்கி. களம், அமர்க்களமாக இருந்தால் சரி.

அரவிந்த்

© TamilOnline.com