டூரிங் டாக்கீஸ்


நீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ். "விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் தொடங்கி, இதுவரை 68 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். எனது 69ஆவது படமாகவும், கனவுப் படமாகவும் 'டூரிங் டாக்கீஸ்' உருவாகி வருகிறது. மூன்று சிறிய கதைகளை ஒருங்கிணைத்து, இந்தக் கதையை அமைத்துள்ளேன். படத்தில் 70 வயது முதியவராகப் பாத்திரமேற்று நான் நடித்துள்ளேன்" என்கிறார் சந்திரசேகரன். முக்கிய வேடங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். படத்திற்கு இசை: இளையராஜா. மால்களில் பார்க்கலாமோ டூரிங் டாக்கீஸை!

அரவிந்த்

© TamilOnline.com