வஜ்ரம்


உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.டி. ரமேஷ்செல்வன் இயக்கும் படம் வஜ்ரம். இப்படத்தில் பசங்க, கோலிசோடா படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக பவானிரெட்டி அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை சிநேகன் எழுத, பைசல் இசையமைக்கிறார். வசனத்தை லோகிதாஸ் எழுத கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் ரமேஷ்செல்வன். ஜெய்ஹிந்த்-2 படத்தைப் போன்றே இப்படமும் கல்விப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com