இந்திய கிறிஸ்துவ ஆலயம்: வெள்ளி விழா
2014 ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி, இந்திய கிறிஸ்துவ ஆலயம் (Christ Church of India, 460 S Cypress Avenue San Jose – 95117) தனது வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களைச் சிறப்பாக நடத்தியது. இதில் சிறியோர் இசைக்குழு, நடனங்கள், விசேடத் துதிப்பாடல்கள், நாடகம் போன்றவை இடம்பெற்றன.

ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆலயத்தின் சிடி டீம் குழுவினர் சான் ஹோசே பகுதியில் இயற்கை அழிவு மற்றும் தேவை நேரங்களில் உதவிகளைப் புரிகின்றனர். தவிர, வேதாகமக் கற்றுமுறை, விடுமுறை வேதாகமப் பள்ளி, அறுவடை சிறப்பு நாள் போன்ற முக்கிய விழாக்களையும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 1989ல் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் போதகராகத் திரு. ரஞ்சன் சாமுவேல் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.

ஆனி பிரிசில்லா,
ஞானமணி

© TamilOnline.com