ஆக்கம்


மற்றுமொரு வடசென்னை படம் 'ஆக்கம்'. சதீஷ் ராகவன் என்ற புதுமுக நாயகன் அறிமுகம் ஆக, வைதேகி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரஞ்சித், தருண் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வித்தியாசமான வில்லன் வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வேலுதாஸ் ஞானசம்பந்தம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் தழுவலாம். "ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவது இல்லை. அவன் எப்படி, எந்தச் சூழலில் வளர்கிறான் என்பதை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே படத்தின் கரு" என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com